என்னை யாரென்று எண்ணி பார்க்கிறேன்!

Finding Myself, Life and Rejoice in the $$ Land

Archive for the ‘நானும் கவிதையும்’ Category

முதல் முறையாய் காதலிக்கு!…..

Posted by தம்புரா on October 9, 2008

கொஞ்ச நாளா இந்த Carton சுமக்கிற வேலையால என்னால கவிதையே எழுத முடியலைஅதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்கஆனா என்ன செய்ய? இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு கவிதை போடுறேன் இல்ல அதுதான்

 

முதல் முறையாய் காதலிக்கு!…

 

தூக்கத்திலும் என் பெயர் சொல்லி உளரும் என் தேவதைக்கு….

 

 குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!

உன்னில், உன் கண்ணில் காதல் விதைக்க நான் என்னை விண்ணில் புதைத்தேன்!

இன்று உன் தங்கக் காதல் கூண்டில் இருக்கும் கிளி நான்!

 

வாசற்கதவருகே காரிலிருந்து இறங்கும் என் காதல் தேவதைக்கு

காத்திருந்தேன் பல யுகங்கள்! சில வினாடி என என் கைக்கடிகாரம் பொய் சொல்கின்றது!

 

ஜாமங்கள் கடந்தபின்

உன் வீடு வந்து சேரும் என்னை நீ  நெஞ்சோடு  அணைக்கையில்

தான்  களைப்பே  சுகமாய் 

நிலைப்பதை  உணர்ந்தேன்  கண்ணே!

 

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கிரெடிட் கார்ட் தேய்த்து

பிட்சா தின்று வீடு திரும்புகையில், சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும்

உன் கண்களில் காதல் விளையாடுமடி!

அதற்கு என்னில் மறுமொழி இல்லையடி!

 

படிப்பில் உயர்ந்து விட்டோம். பணத்தால் உயர்ந்துவிட்டோம்.

நாகரீகத்தாலும் உயர்ந்துவிட்டோம்.

நம் காதல்தான்  சிறிது காலம் இவற்றுக்குள் மறைந்துவிட்டது.

 

இப்போது என் நண்பன் கூறுகிறான்…”பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்!”

எனக்கு முன்பு இப்படிதான் இருந்திருக்கிறது

அதனால் தான் என்னவோ காதல் கிடைத்தவுடன்

அளவுக்கு அதிகமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

 

நீ பேசுவது..இலக்கியம் இல்லா இன்னிசை!…இலக்கணமற்ற தேன் மழை!

நீ கொஞ்சுவது, அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை! நீ ஒரு சிங்காரச் சரிதை!

 

உன் சிரிப்பு சில்லறைக் காசுகளாய் உதிரும் போதெல்லாம்

என் கோபங்களும் உதிர்ந்து போகும்!

 

உன்னை  முதன்முதலாய்  கண்ட பொழுது  என்னுயிர்

மறுமுறை  ஜனிக்கின்ற  வலியை

உணர்ந்தேன்  கண்ணே !

 

நொடிக்கொருமுறை   நீ  சிணுங்கையில்  தான் உயிரும்  அதிர்கிறதே!

உன்னைக்  கொஞ்சிடத்தான் என்  ஒவ்வொரு  அசைவும்  முயலுதே!

என் மடிமீது  நீ  கிடக்கையில் மனதுக்குள்  மத்தாப்பு  பூக்குதே!

எப்பொழுது  உன்  கொஞ்சல் மொழி கேட்பேன் என என்னுயிர்  துடிக்குதே!

 

ஆம்குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…! J

ம்ம்இனி நீ என்னை சமாளிப்பது கடினம்….!

 

 செய்தித் துளிகள்: 2008இல் இது தான் என் முதல் கவிதை!

 

 

 

Posted in நானும் கவிதையும் | Leave a Comment »

ச்ச்சீய்ய்… போடா…. – நான் சுட்டவை உங்களுக்காக (நீங்களும் சுடலாம் )

Posted by தம்புரா on September 27, 2008

ச்ச்சீய்ய்… போடா….

உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா…

எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??

ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் …
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ…

என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்…

தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..

உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்…? 

நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்…

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்

என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது…

யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்…
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா…
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே…
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!

உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்…?
ச்ச்சீய்…போடா..
பேசித்தொலைக்கிறேன்…

உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ…?

இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்…
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?

 

Posted in நானும் கவிதையும் | Leave a Comment »