எங்கிருந்து வந்தது இந்துமதம்?
Posted by தம்புரா on October 19, 2008
எங்கிருந்து வந்தது இந்துமதம்?
DONKEY SOUP for the DRUNKEN SOUL….( ரொம்ப நேரம் subtitle தேடினேன் J)
திடீரென இப்படி ஒரு குண்டை தூக்கி போட காரணம், பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மதச்சண்டை நிறைந்த இந்தியாவையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதற்கே!
சரி, இப்போது உங்கள் மனதில் எழும் அடுத்த கேள்வி –
‘நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று. அதற்கு ஒரு பதிவை அடுத்து போட்டுள்ளேன்…
“அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசாதீங்க. ஊரெல்லாம் இந்த மாதிரி நெறைய சாமி இருக்கு. உனக்கு தான் தெரியலை. நம்புங்க.” – இப்படி சொல்றவனை செருப்பால அடிப்பேன்!
பல்வேறு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மிகவுயர்ந்த குணநலன்களுடன் தோன்றிய வரை மக்கள் பின்பற்றி, வழிபட்டு, அவர்களை அவதாரங்கள், தேவதூதர்கள் என்று போற்றுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.
அதே நேரம், அனுமன் கற்பனையா, உண்மையா என்பது முக்கியமல்ல. அவரின் குணமாகிய உடல் வலிமையை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்,
ஒரிஸாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராகப் பற்ற வைக்கப்பட்ட மதத் `தீ‘ கர்நாடகாவுக்கும் பரவ, ஒட்டுமொத்த இந்திய தேசமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. இதுபற்றி உண்மை கண்டறியச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த வாரம் `நிஜ நிலவர‘ அறிக்கையை வெளியிட, கலவரப்பட்டுப் போயிருக்கிறது கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க அரசு. அதிலும், போலீஸாரே தலைமையேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் அம்பலமாகியிருப்பதுதான் ஹைலைட்.
ஒரிஸா கலவரத்திற்கும், கர்நாடக கலவரத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அது, ஒரிஸா கலவரத்தை போலீஸார் வேடிக்கை பார்த்தனர். கர்நாடக கலவரத்தை போலீஸாரே தலைமையேற்று நடத்தினர்”
அதே நேரம், மாற்று மதத்தினர் அற்புத எழுப்புதல் கூட்டங்கள் என்ற பெயரில் ஊமைகளைப் பேச வைக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; காது கேளாதவர்களை கேட்க வைக்கிறோம் என்கிறார்கள். இதற்காக பணம் கொடுத்து ஆட்களைத் தயார் செய்து, பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். இது உண்மையென்றால், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளே இருக்கக் கூடாது அல்லவா? இந்தியாவில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான `மேஜிக் மெடிசன்‘ தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மோசடி நடக்கிறது. ஹிந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை எதிர்த்துப் பேசும் நாம், கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களில் உள்ள இதுபோன்ற மூடப்பழக்கங்களைக் கண்டிக்க வேண்டும்! மதமாற்றம் தான் வன்முறைக்கு வித்திடுகிறது
யார் இந்த ராமர்?
சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதற்கான ஆதாரம் கம்பராமாயணத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் இந்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசின் அறிக்கை ஒரு புளுகு மூட்டை. அப்படியொரு கருத்து ராமாயணத்தில் இல்லை. முன்பு `ராமரே இல்லை‘ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்து அதை திரும்பப் பெற்று அவமானப்பட்டது மத்திய அரசு. அதை திரும்ப பெற்றிருக்ககூடாது! தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், இந்து முன்னணி அமைப்பைத் தடை செய்தால், அதை வரவேற்போம்.
வரலாறுகள் மாறுது…! மதக்கலவரத்தால் பலர் சாவது என்பது தேசியமானது!
பொடா..வே இனி தீர்வு என்பது தவிர்க்க முடியாதது!
என் உயிர் போனாலும் துயரில்லை, அதற்காகவா இதை எழுதினேன்! வருங்காலத்தின் நிலையை எண்ணி அதற்காகத்தான் வாடினேன்!
இந்த நிலையை எண்ணி வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்!