என்னை யாரென்று எண்ணி பார்க்கிறேன்!

Finding Myself, Life and Rejoice in the $$ Land

SUN NEVER SETS IN THE SAURAV EMPIRE!……

Posted by தம்புரா on November 9, 2008

Guard of Honor to the Tiger by Kangaroos. Sanaa Ganguly

Guard of Honor to the Tiger by Kangaroos. Sanaa Ganguly

It’s been said a million times before. `When to go’ is easily the toughest question in a sportsman’s career.

Everyone has got the answer for the Question they asked Ganguly for the past decade. Finally the cricketing life with numerous u-turns is all set to pause.

My generation needs to brace itself for this exodus.

Hundred on the glorious debut, golden duck in the end .. a rainbow in between. Even Bradman didn’t manage a golden duck for his farewell.

Ganguly had tugged at the heartstrings in a way that no Indian cricketer has before or since. The last few years of his career were like reality TV, with no one able to look away. But like a man who knew the significance of a big occasion – who else would start with a century at Lord’s? – he had saved his best for last.

Of the many things you might accuse Ganguly of, lack of a sense of theatre wasn’t one. Watching Gangles was fun.

Some felt he couldn’t play the bouncer, Millions swore that he was God on the off-side; some laughed at his lack of athleticism, Many took immense pride in his ability to galvanise a side.

Nobody can dispute that he was India’s most successful Test captain – forging a winning unit from a bunch of talented, but directionless, individuals – and nobody can argue about him being one of the greatest one-day batsmen of all time.

A radiant person who is serene and energetic can be remembered as

* A man of instincts and impulses,

* A batsman who combined grace with surgical precision in his strokeplay,

* A Leader who is tough, intuitive and uncompromising.

As captain he was an uplifting figure prepared to stand up for his players. It is easily forgotten that his captaincy started with Indian cricket at its lowest ebb.

Ganguly came to symbolise individualism and rebellion. He predicted Dhoni to become a big player.

His book always had a different story for Sehwag, Bhajji, Yuvi, Kaif and MSD. He is no laughing matter. He is as inspiring as any sports personality. The amazing point was his comeback after  500 days and it will remain in our hearts in our lifetime.

It has been an astonishing career. Some men prefer to follow a predictable path and their stories tell of a slow rise to the top and an equally measured decline. To that end instinct is subdued, contention avoided and risk reduced. That has been altogether too dull for Ganguly. Throughout he has toyed with his fate, tempting it to turn its back on him so that once again he could surprise the world with a stunning restoration. Something in him rebelled against the mundane and the sensible.

He needed his life to be full of disasters and rescues, and comebacks and mistakes and memorable moments. To hell with the prosaic; At heart he is a cavalier, albeit of mischievous persuasion.”The Ganguly situation” was impossible. No answer is a solution; When you want him out of the team, he blazes a century. He has had enough of this short-ball business. Anyone’s Solidarity is no match to Saurav’s Warrior Image.

Btw to remind everyone, Dravid had made the worst decision of his life, setting an example, by stripping off Ganguly; The same knife pointed to him now with no come back. Saurav’s and soon following Sachin’s retirement may mean a lot of things to a lot of people, but for my generation of 25- to 30-year-olds it will mark the end of the first part of our lives. Switching on the television the day after will be a serious challenge.

And now he leaves the scene. Although he has batted with silky serenity in this series, it is the right time to go. A man has only so many struggles in him. A player’s supporters have only so many battles in them. Perhaps in the last few days of his career he has played his part in India’s greatest cricketing feat, the downing of Australia not by miraculous deed but sustained ruthlessness. He deserves. Ganguly has been neither a genius or a saint or a great batsman, but he has served with distinction and leaves Indian cricket in a much better state than he found it. Personally FOR ME, SUN NEVER SETS IN THE SAURAV EMPIRE!……

Here is my word of verdict: Whatever the odd critic might unearth, Dada is without doubt India’s GREATEST son.

 

 

Posted in Cric Crazy | Leave a Comment »

TANDOORI CHICKEN:

Posted by தம்புரா on October 19, 2008

Marinade Items:

50 g Tandoori Masala

2 tablespoons vegetable oil

1/2 cup chopped white onion

3-4 tablespoons ginger garlic paste       

1 teaspoon ground cumin

1 teaspoon turmeric

1 teaspoon ground coriander

1-2 teaspoon garam masala

1/2 cup plain yogurt – 200 gms

2 tablespoon fresh lemon juice(or 4-6)

1/4 teaspoon ground cardamom

1/4 teaspoon ground cloves

1/4 teaspoon fresh-ground black pepper

2 teaspoons salt, or to taste

Vegetable oil, for brushing

1 tspn of kashmiri red chilli powder
½ a teaspoon Saffron (optional if unavailable)

Red and Orange color few drops each

  • Mix the above content and form the marinade.
  • Marinate the Chicken (3 lbs) pieces for two days.
  • Place it it the Grill-oven until it turns golden. Serve with Onion/Lemon pieces on Top.

Posted in RECIPEs | Leave a Comment »

“நீ ஆத்திகனா, நாத்திகனா?”

Posted by தம்புரா on October 19, 2008

நீ ஆத்திகனா, நாத்திகனா?”

 

கேள்வி எளிதானதாக இருக்கலாம். ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை, அல்லது எளிதான பதில் இல்லை. எல்லாக் கேள்விகளுக்குமே பதில்கள் இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை நான் எதிர்க்கிறேன். ஒன்றற்கொன்று தொடர்புடையனவாய், பலக்கியதாய் இருக்கும் வினை, எதிர்வினைச் செயலாக்கங்களுக்கெல்லாம் ஆதார ஆரம்பப்புள்ளியைத் தேடிச் செல்வது கொஞ்சம் நாட்களுக்குச் சுவாரசியமாய் இருக்கலாம். ஆனால், அது முடிவில்லாத சுழல்பயணமன்றி வேறென்னவாய் இருக்க முடியும்?

 

ஆராய்ச்சியும் வாழ்க்கையின் ஒரு அங்கமெனினும், வெறும் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைப்பதை விட, வாழ்க்கையில் ஆராய்ச்சிக்கான வித்துக்களை விட்டுச் செல்வதை விரும்ப ஆரம்பித்திருக்கிறேன். அதனால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும், நாத்திகனாகவும் இருக்கிறேன். சிலசமயம் நான் என்னவாய் இருக்கிறேன் என்பதை விட, என்னவாய் இல்லை என்பதைச் சொல்ல எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். அதன் அடிப்படையில் சொன்னால், ஒரே சமயத்தில் நான் ஆத்திகனாகவும் நாத்திகனாகவும் இல்லாதிருக்கிறேன்.

 

நாத்திகம் என்பது

நாத்திகம் அவரவர்கள் மன உணர்ச்சிஆராய்ச்சித் திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல; ஒரு கட்சி அல்ல; ஒரு மத மல்ல.

 

நாத்திகன்ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாத்திரம் சொல்லுகிறது, பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின் படி நடப்பவன் ஆத்திகன்.

 

நாத்திகன் என்பதற்குக் கடவுள் இல்லை யென்பவன் என்று பொருளல்ல; புராண இதிகாச வேத சாத்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே, அவற்றைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று எழுதி வைத்திருக்கின்றனர். இராமாயணத்தில் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்த புத்தர் முதலானவர்களை நாத்திகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பகுத்தறிவுக்கும் நாத்திகத்திற்கும் உள்ள உறவு

சமுதாயச் சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொது உடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்.

 

நாத்திகத்தின் பிறப்பிடம்

எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இட மில்லையோ ங்கெல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது. கிருத்துவையும், முகமது நபியையும் கூட நாத்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மமும், சீர்திருத்தமும்தான் காரணமாகும்.

 

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒருவனைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில் கடவுளுக்குத்தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே ஒரு மனிதன் இப்படி முட்டாள் தனமான காரியத்தைச் செய்வானா அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியதைதச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை நாத்திகன், கடவுளை மறுக்கிறவன் என்று குறையோ குற்றமோ சொல்ல மாட்டான்.

 

நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

 

கருவாச்சியான் எழுதினான் அன்று!…….

“புரட்சிகள் ஏதும் செய்யாமல் உலகிற்கு நன்மை விளையாது

கண்ணகி சிலைதான் இங்குண்டு சீதைக்கு கல்லால் சிலை ஏது?”

 

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்…

நாத்திகம் பேசும் நல்லோர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்

பாட்டுக்கு வேண்டுமானால் இது ஒத்து வரும்! நடைமுறைக்கல்ல!…..

 

தமிழ் இலக்கியம் வளர மட்டுமே சாமி உதவினான் ஒழிய, தமிழர்(இந்தியரும் கூட) வளர அல்ல!

முன்னொரு காலத்திலே விண்ணிலே சமர் புரிந்த போரூர்க் கந்தசாமியிடம் தனக்கென்று கேட்க ஒன்றும் தோன்றவில்லை அன்று. விண்ணிலே வென்றவனுக்கு மண்ணிலே எதற்கு மணிமண்டபம் என்னும் கிளைக் கேள்வியை இன்னொரு நாளுக்கென்று வைத்துக் கொள்வோம்.

 

நான் கேட்டுக் கேட்டுத் தான் இந்தச் சாமி எனக்குச் சவுகரியத்தைக் கொடுக்க வேண்டும் என்றால், என்ன பண்ணாட்டுக்கு இவன் என்னை முதலில் படைக்க வேண்டும்? வேறு வேலை இல்லையா இவனுக்கு? சரி, அப்படி முதலிலேயே, படைக்கும்போதே எல்லாவற்றையும் தந்து இவன் என்னை அனுப்பிவிட்டான் என்றால், அப்புறம் இப்போது போய் இவனிடம் என்னத்தையென்று கேட்பது? ஆக, எனக்குக் கேட்க ஒன்றுமில்லாத கந்தசாமியை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? ‘நீயும் நல்லா இருப்பாஎன்று வாழ்த்திவிட்டுச் செல்லத்தான் முடிகிறது, சிலசமயம்.

நான் கேட்பதை அவன் செய்யவேண்டும் என்று விரும்பினால் நான் ஆத்திகனாவேன் என்றால், ஒரு சில விசயங்களுக்காக நான் ஆத்திகனாக இருக்கலாம். அவனை உறுதியாக நம்பி உருகும் உன்னோடு அவன் சந்நிதிக்கு வர எனக்குப் பிடிக்கிறது. நீ கேட்பதை அவன் உனக்குத் தர வேண்டும் என்று உனக்காகச் சில சமயம் அவனைக் கேட்பதில் எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. பல்லாண்டுகளாகவும் நான் இதைச் செய்திருக்கிறேன். என் சிபாரிசுக்கு அவனிடத்தே என்ன மதிப்பு இருந்தது என்று எனக்குத் தெரிந்ததில்லை. நீ என்ன கேட்டாய், கேட்பாய், அது கிடைத்ததா என்றும் எனக்குத் தெரியாதே. ஒரு வேளை நீயும் உடன்வரும் எனக்குத் தேவையானவற்றைக் கொடு என்று கேட்டிருந்தாயானால் பாவம், அவனும் ஒரு சுழல்பாதையில் சென்றிருக்கக்கூடும்.

முன்பெல்லாம்எல்லாரும் நல்லா இருக்கணும்பாஎன்றும் கூட இவனிடம் கேட்டிருக்கிறேன். பாவம், எல்லோரையும் பார்த்துக் கொள்கிற பாரம் எளிதானதா என்ன? ‘போய்யா, போஇதென்ன அற்ப சூரன் வதைச் சமரா? இந்தக் கரணம் எல்லாம் நம்மால் ஆகாது ராசா’, என்று மலையேறிப் போய்விட்டான் போலும். நன்றாக வைத்துக் கொள்ள நான் கேட்டுக்கொண்டவர்களில் சிலபேர் சுமாராகத் தான் இருக்கிறார்கள். அவன் கஷ்டம் எனக்குப் புரியத்தான் செய்கிறது.

 

சரி, இதையே உன்னிடம் சொன்னால் அதை நீ எதிர்கொள்ளும் விதம் வேறாய் இருக்கலாம். ஒரு வேளை இன்னும் கொஞ்சம் நம்பிக்கையோடும், இறைஞ்சுதலும் வேண்டுதலுமாய் நான் கேட்டிருக்க வேண்டும் என்று நீ கூறலாம். அது பற்றியும் நான் மறுப்பேதும் சொல்லப் போவதில்லை. உன்னுலகில் அவ்வாறு தான் செயலாற்ற வேண்டும் என்று நீ எண்ணி அமைத்திருக்கலாம். அதைத் தான் நானும் சொல்கிறேன். உன்னுலகை நீயும் என்னுலகை நானும் தான் இயக்கிவர வேண்டும். அவன் உலகை அவனும்.

 

சதா அழிந்தும் ஆகியும் வருகின்ற உலகங்களுக்கு இடையே உன்னுலகும், என்னுலகும், அவன் உலகும் சந்திக்கின்ற ஒரு உன்னத கணப்பொழுதில் எழும் உணர்விற்கும் நிறைவிற்கும் காரணப்பெயர் ஆத்திகமாய் இருந்தால் என்ன? நாத்திகமாய் இருந்தால் என்ன?

 

கடவுளைப் பற்றி ஆத்திகரால் விளக்கிக் கூற முடியவில்லை. கடவுள் என்ற கருத்தை உறுதிபடக் கூறுபவரால் அதனைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற இயலவில்லை. என் உருவத்தில் நான் இருப்பதைத் தவிர கடவுள் என்ற உருவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கூறப்படுமானால் அத்தகைய ஒன்று இருக்க இயலும் என்பதை நான் மறுக்கிறேன்.

பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும்போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமே யாகும். அதாவது, கடவுளே நம்பாதகடவுள் செயலை நம்பாத செயலே யாகும்.

 

தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்கிற எவரும், கடவுள் நம்பிக்கையாளர்கள் என்கின்ற எவரும் கடவுளை நம்பி எந்தக் காரியத்தையும் கடவுளிடம் விடுவது கிடையாது. தலைவலி வந்தால்கூட டாக்டரிடம்தான் செல்கிறார்கள். இவர்கள் எப்படி உண்மையான கடவுள் நம்பிக்கைக்காரர்களாக இருக்க முடியும்? எனவே தான் இவர்களைச் சிந்தனையாளராக இல்லாத நாத்திகர்கள் என்கின்றேன்.

 

சொல், … இப்போது சொல். நான் நல்லவனா, கெட்டவனா?

 

ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இருக்க வேண்டும் என்று நான் இப்போதெல்லாம் எதிர்பார்ப்பதில்லை.

 

இக்கருத்து எவ்வாறு உருவானது என்பதையும் நம்மால் எண்ணிப் பார்க்க இயலவில்லை. ஒன்றுமே இல்லாதது ஏதேனும் ஒன்றாக ஆவதையோ அல்லது ஏதோ ஒன்று ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுவதையோ நம்மால் கருதிப் பார்க்க இயலவில்லை.

 

Posted in நாத்திகம் | Leave a Comment »

எங்கிருந்து வந்தது இந்துமதம்?

Posted by தம்புரா on October 19, 2008

எங்கிருந்து வந்தது இந்துமதம்?

DONKEY SOUP for the DRUNKEN SOUL….( ரொம்ப நேரம் subtitle தேடினேன் J)

 

திடீரென இப்படி ஒரு குண்டை தூக்கி போட காரணம், பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மதச்சண்டை நிறைந்த இந்தியாவையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதற்கே!

 

சரி, இப்போது உங்கள் மனதில் எழும் அடுத்த கேள்வி

நீ ஆத்திகனா, நாத்திகனா?’ என்று. அதற்கு ஒரு பதிவை அடுத்து போட்டுள்ளேன்

 

அப்படி எல்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசாதீங்க. ஊரெல்லாம் இந்த மாதிரி நெறைய சாமி இருக்கு. உனக்கு தான் தெரியலை. நம்புங்க.” – இப்படி சொல்றவனை செருப்பால அடிப்பேன்!

 

பல்வேறு காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மிகவுயர்ந்த குணநலன்களுடன் தோன்றிய வரை  மக்கள் பின்பற்றி, வழிபட்டு, அவர்களை அவதாரங்கள், தேவதூதர்கள் என்று போற்றுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை.

அதே நேரம், அனுமன் கற்பனையா, உண்மையா என்பது முக்கியமல்ல. அவரின் குணமாகிய உடல் வலிமையை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்,

 

ஒரிஸாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராகப் பற்ற வைக்கப்பட்ட மதத் `தீகர்நாடகாவுக்கும் பரவ, ஒட்டுமொத்த இந்திய தேசமே கொந்தளிப்பில் ஆழ்ந்தது. இதுபற்றி உண்மை கண்டறியச் சென்ற மனித உரிமை ஆர்வலர்கள், கடந்த வாரம் `நிஜ நிலவரஅறிக்கையை வெளியிட, கலவரப்பட்டுப் போயிருக்கிறது கர்நாடகாவை ஆளும் பா.. அரசு. அதிலும், போலீஸாரே தலைமையேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் அம்பலமாகியிருப்பதுதான் ஹைலைட்.

 

ஒரிஸா கலவரத்திற்கும், கர்நாடக கலவரத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அது, ஒரிஸா கலவரத்தை போலீஸார் வேடிக்கை பார்த்தனர். கர்நாடக கலவரத்தை போலீஸாரே தலைமையேற்று நடத்தினர்

 

அதே நேரம், மாற்று மதத்தினர் அற்புத எழுப்புதல் கூட்டங்கள் என்ற பெயரில் ஊமைகளைப் பேச வைக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; காது கேளாதவர்களை கேட்க வைக்கிறோம் என்கிறார்கள். இதற்காக பணம் கொடுத்து ஆட்களைத் தயார் செய்து, பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். இது உண்மையென்றால், கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளே இருக்கக் கூடாது அல்லவா? இந்தியாவில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான `மேஜிக் மெடிசன்தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி இந்த மோசடி நடக்கிறது. ஹிந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை எதிர்த்துப் பேசும் நாம், கிறிஸ்துவம், இஸ்லாம் மதங்களில் உள்ள இதுபோன்ற மூடப்பழக்கங்களைக் கண்டிக்க வேண்டும்! மதமாற்றம் தான் வன்முறைக்கு வித்திடுகிறது

 

யார் இந்த ராமர்?

 

சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதற்கான ஆதாரம் கம்பராமாயணத்தில் இருப்பதாக நீதிமன்றத்தில் இந்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசின் அறிக்கை ஒரு புளுகு மூட்டை. அப்படியொரு கருத்து ராமாயணத்தில் இல்லை. முன்பு `ராமரே இல்லைஎன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்து அதை திரும்பப் பெற்று அவமானப்பட்டது மத்திய அரசு. அதை திரும்ப பெற்றிருக்ககூடாது! தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், இந்து முன்னணி அமைப்பைத் தடை செய்தால், அதை வரவேற்போம்.

 

வரலாறுகள் மாறுது…! மதக்கலவரத்தால் பலர் சாவது என்பது தேசியமானது!

பொடா..வே இனி தீர்வு என்பது தவிர்க்க முடியாதது!

 

என் உயிர் போனாலும் துயரில்லை, அதற்காகவா இதை எழுதினேன்! வருங்காலத்தின் நிலையை எண்ணி அதற்காகத்தான் வாடினேன்!

 

இந்த நிலையை எண்ணி வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்!

 

 

Posted in நாத்திகம் | Leave a Comment »

“CRICKET CRAZY” A Tale of Two Legends – 2nd Test Ind Vs Aus

Posted by தம்புரா on October 19, 2008

BIG Three

BIG Three

Welcome back to my cricket column – “CRICKET CRAZY“.

The Test series in the sub continent has had a lot of focus and attention. பார்ப்போம், என்ன நடக்குது..னு?!

Fab Five will have to prove them again to stop all Media rubbish talks and have the crown decorating their heads comfortably; Also should make sure it is  positive one-way traffic for them when it comes to selection after this series.

Looking at India’s batting-

The series, in fact, the match is of great significance to Sachin Tendulkar, who had scored 12027 till date surpassing Brian Lara’s world record Test aggregate of 11,953 runs.

Sehwag and Dravid have turned the tables somehow but the issue with them is they would like to see the balls come on to the bat like in Mohali last night.

Sachin and Sourav has seen a lot of these kind of bowlers. They can handle all with ease. You could see that in Saurav’s century and sachin;s record breaking 92.

I foresee India putting on 600+ leading on board.

My heart feels - India’s fate will always remain in the hands of the legends Sachin and Sourav. They will have to write their own scripts which they have done in the past two decades over and over again.

GAME ON! J J J

Posted in Cric Crazy | Leave a Comment »

முதல் முறையாய் காதலிக்கு!…..

Posted by தம்புரா on October 9, 2008

கொஞ்ச நாளா இந்த Carton சுமக்கிற வேலையால என்னால கவிதையே எழுத முடியலைஅதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்கஆனா என்ன செய்ய? இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு கவிதை போடுறேன் இல்ல அதுதான்

 

முதல் முறையாய் காதலிக்கு!…

 

தூக்கத்திலும் என் பெயர் சொல்லி உளரும் என் தேவதைக்கு….

 

 குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!

உன்னில், உன் கண்ணில் காதல் விதைக்க நான் என்னை விண்ணில் புதைத்தேன்!

இன்று உன் தங்கக் காதல் கூண்டில் இருக்கும் கிளி நான்!

 

வாசற்கதவருகே காரிலிருந்து இறங்கும் என் காதல் தேவதைக்கு

காத்திருந்தேன் பல யுகங்கள்! சில வினாடி என என் கைக்கடிகாரம் பொய் சொல்கின்றது!

 

ஜாமங்கள் கடந்தபின்

உன் வீடு வந்து சேரும் என்னை நீ  நெஞ்சோடு  அணைக்கையில்

தான்  களைப்பே  சுகமாய் 

நிலைப்பதை  உணர்ந்தேன்  கண்ணே!

 

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கிரெடிட் கார்ட் தேய்த்து

பிட்சா தின்று வீடு திரும்புகையில், சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும்

உன் கண்களில் காதல் விளையாடுமடி!

அதற்கு என்னில் மறுமொழி இல்லையடி!

 

படிப்பில் உயர்ந்து விட்டோம். பணத்தால் உயர்ந்துவிட்டோம்.

நாகரீகத்தாலும் உயர்ந்துவிட்டோம்.

நம் காதல்தான்  சிறிது காலம் இவற்றுக்குள் மறைந்துவிட்டது.

 

இப்போது என் நண்பன் கூறுகிறான்…”பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்!”

எனக்கு முன்பு இப்படிதான் இருந்திருக்கிறது

அதனால் தான் என்னவோ காதல் கிடைத்தவுடன்

அளவுக்கு அதிகமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

 

நீ பேசுவது..இலக்கியம் இல்லா இன்னிசை!…இலக்கணமற்ற தேன் மழை!

நீ கொஞ்சுவது, அறுந்தறுந்து விழும் அழகிய கவிதை! நீ ஒரு சிங்காரச் சரிதை!

 

உன் சிரிப்பு சில்லறைக் காசுகளாய் உதிரும் போதெல்லாம்

என் கோபங்களும் உதிர்ந்து போகும்!

 

உன்னை  முதன்முதலாய்  கண்ட பொழுது  என்னுயிர்

மறுமுறை  ஜனிக்கின்ற  வலியை

உணர்ந்தேன்  கண்ணே !

 

நொடிக்கொருமுறை   நீ  சிணுங்கையில்  தான் உயிரும்  அதிர்கிறதே!

உன்னைக்  கொஞ்சிடத்தான் என்  ஒவ்வொரு  அசைவும்  முயலுதே!

என் மடிமீது  நீ  கிடக்கையில் மனதுக்குள்  மத்தாப்பு  பூக்குதே!

எப்பொழுது  உன்  கொஞ்சல் மொழி கேட்பேன் என என்னுயிர்  துடிக்குதே!

 

ஆம்குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…! J

ம்ம்இனி நீ என்னை சமாளிப்பது கடினம்….!

 

 செய்தித் துளிகள்: 2008இல் இது தான் என் முதல் கவிதை!

 

 

 

Posted in நானும் கவிதையும் | Leave a Comment »

கனாக் கண்டேன்

Posted by தம்புரா on October 4, 2008

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் (கோதையின் கதை)

அன்புத் தோழி. நீ சொன்னது போல் நேற்று மாலை நாம் கூடல் இழைத்துப் பார்த்தோம். கோவிந்தன் வரும் நாள் கூடி வரும் என்று நாம் இழைத்தக் கூடல்கள் எல்லாம் சொல்லின. நேற்று இரவு அந்த கோவிந்தனே வந்தானடி. கனவில் வந்து என்னைக் கைப்பிடித்தான்.

ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர என் தலைவன் நாராயணன் வருகின்றான் என்ற செய்தியைக் கேட்டதும், அவனை எதிர்கொண்டழைக்க ஊரார் எல்லாம் பொன்னால் செய்து புனித நீர் நிறைத்தக் குடங்களை எல்லாத் திசைகளிலும் வைத்து வீதி வாசல் எங்கும் தோரணம் நாட்டினார்கள். அதனை என் கனவில் நான் கண்டேனடி தோழீ.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்

நாளை திருமண நாள் என்று குறித்து, பாளையும் கமுகும் நிறைந்திருக்கும் பந்தல் கீழ், சிங்கத்தைப் போன்ற மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுந்து வரக் கனாக் கண்டேன் தோழீ நான்.

 நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

தேவர்களின் தலைவன் இந்திரனை முன்னிட்டு எல்லாத் தேவர்களும் வந்திருந்து என்னை மணப்பெண்னாய் பேசி மந்திரங்கள் சொல்லி எனக்கு புதிய உடைகளை அணியக் கொடுத்து, நான் அவற்றை அணிந்து வந்த பின் அந்தரியாகிய பார்வதி தேவி எனக்கு மணமாலை சூட்டிவிடக் கனாக் கண்டேன் தோழீ நான்.

 

 இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

எல்லாத் திசைகளிலிருந்தும் தீர்த்தம் கொண்டு வந்து பார்ப்பனர்களில் சிறந்தவர்கள் பல பேர் அதனை எடுத்து மந்திரங்களால் புகழ்ந்து, தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் புனிதனுக்கும் எனக்கும் கையில் காப்புக் கயிறு கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்

 

நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்றன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்

கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்.

மத்தளம் கொட்ட வரிகளுடன் கூடிய சங்குகள் முழங்க முத்து மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட பந்தலின் கீழ் என் தலைவன் அழகன் மதுசூதனன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்.

 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்

 

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்.

இந்தப் பிறவிக்கும் இனி வரும் ஏழேழ் பிறவிக்கும் நமக்குக் கதியானவன், நம்மைத் தன் செல்வமாக உடையவன், நாராயணனாகிய நம் தலைவன், தன் செம்மையுடையத் திருக்கையால் என் கால்களைப் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்

 இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்.

வில்லை கையில் ஏந்தியிருக்கும் ஒளிமிகுந்த முகம் கொண்ட என் உடன்பிறந்தோர் வந்து தீயினை வளர்த்து என்னை அதன் முன்னே நிறுத்தி சிங்கமுகம் கொண்ட (நரசிம்மன்) அச்சுதன் கைமேல் என் கை வைத்து பொரியை அந்த தீயினில் இடக் கனாக் கண்டேன் தோழி நான்

 

 வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

குங்குமம் அப்பிக் குளிர்ந்த சந்தனக்குழம்பை உடலெங்கும் பூசி எங்கள் இருவரையும் நீராட்டிய பின், அங்கு அவனோடு யானை மேல் ஏறி மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்.

 

 குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவனோடும் உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.

ஆயனாரை அடைவதாகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழும் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் கோதை சொல்லும் இந்தத் தூய தமிழ் மாலை பத்துப் பாடல்களும் வல்லவர் பெறற்கரிய நல்ல பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்திருப்பார்கள்.

 

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவு கண்ட கோதையின் மனவிலாசம் மகிழ்வளிப்பதே எந்நாளும்.

மாதவனுடன் மணம் நடந்த மகிழ்ச்சியில் கோதைக்கு சொற்கள் முன்னும் பின்னுமாய் வருகின்றன. குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மணநீர் மஞ்சனமாட்டி அங்கவனோடும் உடன் சென்று அங்கானை மேல் மங்கல வீதி வலம் செய்யக் கனாக் கண்டேன் என்று சொல்லாமல் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றில் ஒன்றாய்க் கலந்துச் சொல்கிறாள்.

Posted in எம்மொழி தமிழ்மொழி | Leave a Comment »

ஒலக நாயகனின் தசாவதாரம் (நன்றி:வெட்டி பய புள்ளைக சங்கம்!!!)

Posted by தம்புரா on September 28, 2008

 

“வீர தளபதி” J K Rithish

அவதாரம்-1

 

Bulls Eye Avatar

 


அவதாரம்-2

 

Stylish Avatar

 

அவதாரம்-3

Victory Avatar

அவதாரம்-4

Affectionate Avatar


அவதாரம்-5

SuperStar Avatar


அவதாரம்-6

Action Avatar


அவதாரம்-7

Six-Pack Avatar


அவதாரம்-8

Romantic Avatar


அவதாரம்-9

Michael Jackson Avatar


அவதாரம்-10
Animal Avatar

 

இப்படிக்கு,

வெள்ளி விழா புயல்” “தானை தலைவன்” ரித்தீஷ் ரசிகர் மன்றம், ஆரிகன்-அமெரிக்கா!

 

 

Posted in தமிழ் திரைவானம் | Leave a Comment »

பரதேசி அரசு நடத்தும் தி.மு.க:

Posted by தம்புரா on September 27, 2008

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்! மின்வெட்டை கண்டுபிடித்தவர் ஆற்காட்டார் எனும் நாதாரி! 

 பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுணத்துவம் இல்லாத ஒருவர் அது பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்

இன்று தமிழ்நாடு முழுவதும் தினம்-ஐந்து மணி நேர மின்வெட்டு! 

கலைஞர் பின்னாடியே சென்று செம்பு தூக்கும் வேலையை செய்யாமல், தன் மின்துறையை வீராசாமி கவனிக்கட்டும்! இல்லையேல், உன் தலையை போல தமிழகம் தரிசாகி விடும்!

பணம், பித்தலாட்டம், விளம்பர பலகை, மாறன் குடும்ப ஒழிப்பு -இவைதான் இவரின் தற்போதைய முழு நேர வேலை! சரி, எக்கேடோ கெட்டுப்போங்கள். ஆனால் மக்கள் பிரச்சினையை பார்ப்பது யார்? கருணாநிதியா? அவருக்கு குடும்ப பஞ்சாயத்து தினமும் 24 மணி நேரம்! உள்ளாட்சிக்கு உள்ள வேலையே செய்ய முடியவில்லை?! அன்பழகன்-வெத்தலை போடவே நேரம் சரியாக இருக்கிறது! பொன்முடி,துரைமுருகன்-”சொத்து குவிப்பது எப்படி?” புத்தகம் படிக்கிறார்கள்! குட்டி அமைச்சர்கள்-ஊருக்குள் கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர்! இதிலெங்கே நேரம்? மக்கள்? சேவை?

மக்கள் பிரச்சினைகளின் போது மறைந்து கொள்ளும் இந்த காலிகள் ராமர் மணல்திட்டு பிரச்சினைகளுக்கும், மாறன் சொத்து பிரச்சினைகளுக்கும், குடிகார விஜயகாந்தை செருப்பால் அடிப்பதற்கும், கொலைகார சங்கராச்சாரியின் சல்லாப கூத்துகளுக்கும்தான் சப்பை கட்டு கட்டிக்கொண்டு தெருவுக்கு வந்து முண்டா தட்டுகிறார்கள்….

ஏனெனில் இதுதானே அரசியல்…. நடக்கட்டும். நடக்கட்டும்.

காதலில் விழுந்தேன்படம்ஓட விட்டால் கூட Interval வரை மட்டுமே ஓடும்! மதுரையில் அதற்கும் அரசியல்!

அபியும்..நானும்இசைத்தட்டு வெளியிட அமைச்சர்கள் சகிதம் கலைஞர் வருவது??!! தம்பி ஆற்காடுஅங்கு என்ன புண்ணாக்கா விற்கிறது? நடிகைகளை விலை பேச வந்தீரா? நினைவிருக்கட்டும்…..உங்கள் அனைவருக்கும் பல கடமைகள் இருக்கின்றனமக்கள் 2011..இல் பதில் சொல்வர்!

 ஏம்பாநீங்க சோறு தான் சாப்பிடுறீங்களா? ஏற்கனவே, சிதம்பரம் பண்ற அக்கப்போர்ல, கூடிய சீக்கிரம் எலிக்கறிதான்! அந்த மேட்டர்க்கு அப்புறம் வருவோம்! அடுத்த தடவையாவது ஓட்டை மாற்றி போடுங்க! ஹ்ம்ம்….

என் வீட்டு நாய்க்குட்டிக்கு FAN காற்று இல்லாவிட்டால் தூக்கம் வராது! இப்படியிருக்க, ஒவ்வொரு தமிழனும் மின்சாரம் கேட்பது தவறில்லையே! நல்ல வேளை, நான் இங்கு சுகமே!

 நல்ல காலம்என் வீட்டில் Inverter இருக்கிறது! ஆனால் ஆறு கோடி மக்களிடம் இல்லையே!

 

Posted in இது தான் இந்தியா | Leave a Comment »

ச்ச்சீய்ய்… போடா…. – நான் சுட்டவை உங்களுக்காக (நீங்களும் சுடலாம் )

Posted by தம்புரா on September 27, 2008

ச்ச்சீய்ய்… போடா….

உன்னைக் கண்டு
எதையெதையோ
மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற

இந்தக் கண்களை மட்டும்

மறைக்க முடியவில்லை..
போடா…

எல்லோரும்
இருக்கும் போதும்

யாருக்கும் தெரியாமல்

ஆட்டம் போடும் உன்

கள்ள விரல்களை

என்ன செய்ய நான்..??

ஹையோ.. இப்பொழுதுதான்
கட்டினேன் …
அதற்குள்
இப்படிக்
கலைத்துவிட்டாயே

சேலையை..

என்றால் சரி
கட்டிவிடுகிறேன்
என முழுதும்
கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை

வைத்துக்கொண்டு

சமாளிக்கப் போகிறேனோ…

என் கோபங்களையும்
வெட்கங்களையும்

கன்னா பின்னாவென

தின்றுதீர்க்கும்
உன்
உதடுகளெனும்

முத்தசுரபிகளை

கொஞ்சம் சும்மா

இருக்கச்சொல்லேண்டா..

ப்ளீஸ்…

தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல்
தான்
நடிக்கிறேன்

இந்தப் பாழாய்போன

கைகள்தான்

உன்னைப் பார்த்தாலே

உடைசரிசெய்யும் சாக்கில்

என்னைக் காட்டிக்
கொடுத்து
விடுகின்றன..

உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்…? 

நீ என்னவோ
முகம் முழுதும்

முத்தங்களை
கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்…

அதனால்
வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்

என் முக ரகசியம்
கேட்கும்
தோழியரிடம்
சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது…

யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்…
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா…
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே…
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!

உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்…?
ச்ச்சீய்…போடா..
பேசித்தொலைக்கிறேன்…

உன் உதடுகளையாவது
சமாளித்துவிடலாம்..
ஆனால்
அதன் மீதிருக்கும்
உன் மீசையின்
அட்டூழியங்களை
எப்படி சமாளிக்கப் போகிறேனோ…?

இல்லாத நேரங்களில்
உன் நினைவுகளால்
கட்டிக்கொல்கிறாய்..
இருக்கும் நேரங்களில்
இறுகக் கட்டிக்கொள்கிறாய்…
ஏணடா இப்படிப்
படுத்தி எடுக்கிறாய்..?

 

Posted in நானும் கவிதையும் | Leave a Comment »